Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடிய #NitishKumar! ஏன் தெரியுமா?

04:21 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடியது கவனம் பெற்றுள்ளது.

Advertisement

பிகார் முதல்வரும், ஜக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிகாரில் உள்ள ஒரு மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் நிதீஷ் குமார் கொண்டாடியிருக்கிறார்.

அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பசைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பான அவருடைய எக்ஸ் பதிவில், ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் பண்டிகையாகும். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய தலைநகரில் பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
best wishesbrothersfestive seasonnews7 tamilNews7 Tamil UpdatesNitish Kumarrakhisraksha bandhanSisters
Advertisement
Next Article