For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்" - நீதா அம்பானி!

01:03 PM Jul 28, 2024 IST | Web Editor
 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்    நீதா அம்பானி
Advertisement

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஜூலை 26 கோலாகலமாக தொடங்கியது.  இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா உட்பட 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இது பிரான்ஸில் நடக்கும் 3வது ஒலிம்பிக் போட்டியாகும்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்  திருமணம் முடிந்ததும், தற்போது அம்பானி குடும்பத்தினர் பல முக்கிய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில், பிரான்ஸ் சென்றடைந்த நீதா அம்பானிக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரது வரவேற்பில் கலந்து கொண்டார்.நீதா அம்பானி பாரிஸ் சென்றதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது.

நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுப்பினர் ஆவார். கடந்த 24ம் தேதி   நடைபெற்ற 142வது IOC அமர்வில் 100 சதவீத வாக்குகளுடன் நீடா அம்பானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : “காவிரியில் நீர்த்திறப்பிற்கு முன் விவசாயிகளுக்கான தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

இது தொடர்பாக நீதா அம்பானி கூறியதாவது : "ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கென ஒரு இடம் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement