For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருமகளுக்கு பார்த்து பார்த்து புடவை வாங்கிய நீதா அம்பானி... வைரலாகும் வீடியோ!

09:49 AM Jun 28, 2024 IST | Web Editor
மருமகளுக்கு பார்த்து பார்த்து புடவை வாங்கிய நீதா அம்பானி    வைரலாகும் வீடியோ
Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு,  நீதா அம்பானி வாரணாசியில் புடவை வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்,  தொழிலதிபரான விரன் மெர்ச்செண்ட்டின் மகளான ராதிகா மெர்செண்டிற்கும் அடுத்த மாதம் 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமணத்திற்கு முன்னரே ஆனந்த் அம்பானி-ராதிகாவுக்கும் குஜராத்தின் ஜாம்நகரில் ப்ரீ வெட்டிங் மிகவும் கோலாகலமாக, நடைபெற்றது.  இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் அம்பானி குடும்பத்தினர்.  அதன் ஒருபகுதியாக ஆனந்த் அம்பானியின் தாயும்,  முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி திருமண அழைப்பிதழை வாரணாசிக்கு கொண்டு சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.  தொடர்ந்து அங்குள்ள பிரபல உணவகத்தில் சாட் உணவுகளை சாப்பிட்டார்.  பின்னர் பட்டுச் சேலைக் கடை ஒன்றுக்கு சென்று மருமகளுக்கு புடவை வாங்கினார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் கடைக்காரர் நீதா அம்பானிக்கு புடவைகளை காட்டுகிறார்.  வேறு நிறங்கள் உள்ளதா? வேறு டிசைன் உள்ளதா என நீதா அம்பானி கேட்கிறார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement