Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தமளிக்கிறது" - அமைச்சர் சேகர்பாபு!

03:32 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அன்னதானம் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை" என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!

 இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள பதிவில், "சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது" என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Tags :
AyodhyaDhamAyodhyaRamMandirministersekarbabuRamMandirRamMandirPranPratishtaRamTempleSalemTamilNaduTempleTN
Advertisement
Next Article