For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீலகிரி to அமெரிக்கா... #NewYork-ஐ மெருகூட்டும் யானை சிற்பங்கள்!

06:28 PM Sep 06, 2024 IST | Web Editor
நீலகிரி to அமெரிக்கா     newyork ஐ மெருகூட்டும் யானை சிற்பங்கள்
Advertisement

நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை சிற்பங்கள் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

Advertisement

ஆசிய வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி அமெரிக்க யானைகளின் குடும்பம் எனும் அறக்கட்டளையின் சார்பில் யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரம் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உள்நாட்டு கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலாசார மையங்களின் உதவியுடன் வனவிலங்குகளுக்கான வாழ்வியலை உருவாக்குவதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட யானை சிற்பங்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை  சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, நீலகிரியில் பழங்குடியின மக்களால் லந்தனா கமாரா எனும் செடி உள்ளிட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட யானை உருவம் கொண்ட சிற்பங்கள், புகழ்பெற்ற நியூயார்க் நகரத்திற்கு சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், யானை சிற்பங்களை நீலகிரியைச் சேர்ந்த பெத்தகுரும்பா, பனியா, கட்டுநாயக்கன் மற்றும் சோலிகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இணைந்து தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement