நீலகிரி | இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் யானைகள்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். அடுத்தாக, நேற்று (ஜன. 20) இரவு பந்தலூர் பஜார் மைய பகுதியில் உள்ள பூங்காவிற்குள் இரவு நேரத்தில் திடீரென இரண்டு யானைகள் நுழைந்தன.
இதைக்கண்ட பொதுமக்கள் யானைகள் நுழைந்ததாக கூச்சலிட்டனர். மேலும் டார்ச் லைட் வெளிச்சங்களை கொண்டு யானைகளை விரட்டினர். மெதுவாக நடந்து வந்த இரண்டு யானைகளும் குடியிருப்புகள் அருகே உள்ள பாக்கு தோப்பில் புகுந்தது.
இதனால், மக்கள் வெளியே வர அச்சமடைந்தனர். நீண்ட நேரம் அப்பகுதியில்
சுற்றித்திரிந்த யானைகள் பின்பு வேறு பகுதிக்கு சென்றது. இதனால் இரவு
நேரங்களில் குடியிருப்பு பகுதிகளின் அருகே உலா வரும் யானைகள்
நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.