For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு!

09:58 PM Apr 27, 2024 IST | Web Editor
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு
Advertisement
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : கரூர் – வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழா! நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீலகிரியில் 70.93% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியின் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக  உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.  இதனை கண்காணிக்க 173 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

திடிரென அங்கு  வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  கட்சி முகவர்கள் அமரும் அறையில் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை ( Tv screen) தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பாகாமல் காட்சிகள் துண்டிப்பு ஏற்பட்டதால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படியுங்கள் : உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

இதை தொடர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள்
வரவழைக்கப்பட்டு எந்த காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டு உள்ளது என ஆய்வு
மேற்கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்சிகள்
பதிவாகக்கூடிய பெட்டி சூடான காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது
எனவும்,அந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களால்  20
நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த TV SCREEN காட்சி திரைகள் செய்லபட
தொடங்கின என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். குறிப்பாக திரைகள் மட்டுமே தெரியாமல் ஆனது, ஆனால் கண்காணிப்பு பதிவுகள் அனைத்துமே பதிவாகி உள்ளது என அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags :
Advertisement