For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டொனால்ட் ட்ரம்பின் மனநலம் குறித்து நிக்கி ஹேலி கேள்வி!

08:31 AM Jan 22, 2024 IST | Web Editor
டொனால்ட் ட்ரம்பின் மனநலம் குறித்து நிக்கி ஹேலி கேள்வி
Advertisement

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியாளர் நிக்கி ஹேலி கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

கடந்த சனிக்கிழமை (ஜன. 20) நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிபர் ட்ரம்ப், குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளர் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் நிக்கி ஹேலியைக் குற்றம்சாட்டி பேசினார். அப்போது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்னாள் தலைவர் நான்சி பெலோசிக்குப் பதிலாக நிக்கி ஹேலியைத் தவறுதலாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த அதிபர் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ட்ரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, பிரதிநிதிகள் சபையின் தலைவராக நான்சி பெலோசி பதவி வகித்தார். பிரசாரத்தின்போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், சபையின் தலைவராக இருந்த நிக்கி ஹேலி தனது அரசு வழங்கிய பாதுகாப்பை மறுத்து விட்டதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், சாட்சியங்களை அழித்துவிட்டதாகவும் தவறுதலாகக் குற்றம் சாட்டினார். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் நான்சி பெலோசியை அவா் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அந்த மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய நிக்கி ஹேலி, “ட்ரம்ப் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நான்சி பெலோசிக்கு பதிலாக, அந்தச் சம்பவத்தில் என்னைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதிபராக இருக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய அழுத்தங்களைச் சமாளிக்க அவர் மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் கேள்வியெழுகிறது” என்று விமா்சித்துப் பேசினார்.

Tags :
Advertisement