Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Nigeria | போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு!

11:45 AM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள் : கேரளாவில் இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் | #IMD எச்சரிக்கை!

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசத் துரோகம், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரையும் கடந்த 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, நைஜீரியாவில் 1970-களில் மரண தண்டனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2016 முதல் மரணதண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் குழந்தைகள் உரிமைப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று வழக்கறிஞர் அகிந்தயோ பலோகுன் தெரிவித்துள்ளார்.

Tags :
News7Tamilnews7TamilUpdatesNigerianigerian governmentPoliceProtestProtesters
Advertisement
Next Article