Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிக்கலுதா நிக்கலுதா நின்னு பாரு எதிரதா" - வெளியானது ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.
01:36 PM Mar 30, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.  இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார். பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.  இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

Advertisement

இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள  திரைப்படம்  ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில்  பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ வெளியாகி டிரெண்டானது. இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.  இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Adhik Ravichandranajithajith kumarAKGood Bad UglyGV Prakash Kumarnews7 tamilNews7 Tamil Uddatessecond singleTrisha
Advertisement
Next Article