For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!

11:54 AM Oct 12, 2024 IST | Web Editor
கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா   nia அதிகாரிகள் ஆய்வு
Advertisement

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது.

ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை

இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நத்தினர். விபத்து நடந்த பகுதியில் காலையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து விபத்து நடந்த பகுதியில் ஒவ்வொரு இடமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தும் அவர்களிடம் விபத்து தொடர்பாக விவரங்களை கேட்டு அறிந்தனர்.

Tags :
Advertisement