Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அடுத்த அப்டேட்!

09:48 PM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில், அடுத்த அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. 

Advertisement

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். சத்யராஜ், லால்,தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் பற்றி இயக்குநர் கோகுல் கூறும் போது,  இதன் கதையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கூறியிருந்தேன். அவர் ஆர்.ஜே.பாலாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் சொன்னார். கதையை கேட்ட பாலாஜி உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

நான் இயக்கிய படங்களில் இந்தக் கதை, என் மனதுக்கு நெருக்கமானது. ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கைதான் கதை. இதில் காமெடியும் அதைத்தாண்டிய விஷயங்களும் இருக்கும். வழக்கமாக என் படங்களில் ஹீரோவை தாண்டி அதிக நட்சத்திரங்கள் இருக்காது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எல்லோருக்கும் பிடித்தபடமாக இது இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Cinema updatesDirector Gokulnews7 tamilNews7 Tamil UpdatesRed Giant MoviesRJ BalajiSingapore SaloonVelsFilmIntl
Advertisement
Next Article