நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி - திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு!
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று (பிப். 11) நடைபெறுகிறது.
திருக்கோயிலுக்கு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களுக்கு கைகளில் அடையான Band வழங்கி தனி வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்திக்கொடுக்க நியூஸ்7 தமிழ் தொடர் செய்தி எதிரொலியாக பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பாதயாத்திரை பக்தர்களுக்கு அடையாள அட்டைகளை அணிவித்தார்.