“நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் முதன்மை காட்சி ஊடகங்களில் முக்கியமான இடத்தை பிடிந்துள்ளது!” - எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் முதன்மை காட்சி ஊடகங்களில் பொதுநல நிகழ்ச்சிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் முக்கியமான இடத்தை பிடிந்துள்ளது என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.
வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.
நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.
நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 11-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நியூஸ் 7 தமிழின் 11-ஆவது ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்; இத்தொலைக்காட்சி தமிழ்நாட்டில் முதன்மை காட்சி ஊடகங்களில் ஒன்றாக பொதுநல நிகழ்ச்சிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருவதில் முக்கியமான இடத்தை பிடிந்துள்ளது. அக்.30ந் தேதி ஆண்டு விழாவை கொண்டாடவுள்ள நியூஸ்7 தமிழ் தொலைகாட்சி நிர்வாகத்திற்கும் அவர்களது ஊழியர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.