Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியிடம் தங்கப் பதக்கம் பெற்ற நியூஸ்7 தமிழ் ஊழியர்!

12:42 PM Jan 02, 2024 IST | Jeni
Advertisement

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து நியூஸ்7 தமிழ் ஊழியர் ஜேம்ஸ் ஃபிரடோலின் தங்கப் பதக்கம் பெற்றார்.

Advertisement

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாணவர்களுடன் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களை வழங்கினார்.

இதையும் படியுங்கள் : “எனது மாணவ குடும்பமே...!” - பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

நியூஸ் 7 தமிழ் வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து,  தற்போது நிறுவனத்தில் பணியாற்றி வரும்,  தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் படித்த ஜேம்ஸ் ஃபிரடோலின்,  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.Sc Visual Communication பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார்.  பிரதமர் மோடியிடம் இருந்து ஜேம்ஸ் ஃபிரடோலின் தங்கப் பதக்கம் பெற்றதில் நியூஸ்7 தமிழ் பெருமை கொள்கிறது.

Tags :
BharathidasanUniversityGraduationNarendramodiNews7TamilEmployeePMOIndiaTrichy
Advertisement
Next Article