நியூஸ்7 செய்தி எதிரொலி - பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த சார் ஆட்சியர்!
நியூஸ்7 செய்தி எதிரொலியாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் கனமழையால் பாதிக்கபட்ட சாலைகளை சார் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதியில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நியூஸ்7 செய்தி எதிரொலியாக 5 நாட்களுக்குப் பிறகு சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சார் ஆட்சியர் மாஞ்சோலை பகுதியில் சென்று மழை சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்தார். இந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு மாஞ்சோலை பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவை தொடங்கியது.
இதையும் படியுங்கள் : மழை, வெள்ளம் எதிரொலி - தூத்துக்குடியில் 5வது நாளாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!
அதனை தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பால் மற்றும் அரிசி பருப்பு வகைகள் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், தேயிலை தோட்ட தொழிலாளிகளுக்கு அரசு வழங்கப்படும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லப்படுவதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்தார். இதனால், மாஞ்சோலை பகுதி மக்கள் நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்தனர்.