'கலைஞர் எழுதுகோல்' விருதினை பெற்றார் நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ் !
கலைஞர் எழுதுகோல் விருது ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதன் ஒரு பகுதியாக கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக நியூஸ் 7 தமிழ் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருதினை வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து 'நக்கீரன்' கோபாலுக்கும் முதலமைச்சர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிகரிகள் பலர் உடன் இருந்தனர்.