For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! - குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு ...

09:02 AM Nov 15, 2023 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி    குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய பெண் தாயகத்திற்கு மீட்கப்பட்டார்.

Advertisement

குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது. இந்நிலையில் யோக மகேஸ்வரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்தார் கனிமொழி.

குவைத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கனிமொழி அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராச்சாமி, திமுக அயலக அணியின் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தனர்.

இதையும் படியுங்கள்:கனமழை பெய்யக்கூடிய 27 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்; ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்….

அப்போது, யோக மகேஸ்வரியை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்தார். குவைத்தில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் தூதராக அதிகாரிகளுடன் கனிமொழி விவாதித்தார். இந்நிலையில், யோக மகேஸ்வரியை விரைவில் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தூதரக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, நவம்பர் 6 ல் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் யோக மகேஸ்வரியை மீட்டனர். நவம்பர் 7 ஆம் தேதி குவைத்தில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் யோக மகேஸ்வரி ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அதனை பின்னர்,  நவம்பர் 8ஆம் தேதி  வீட்டு உரிமையாளரிடம் உள்ள யோக மகேஸ்வரியின் பாஸ்போர்ட் மற்றும் ஊதியத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

மேலும்,  நவம்பர் 13 ஆம் தேதி யோக மகேஸ்வரியின் பாஸ்போர்ட் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வீட்டு உரிமையாளர்களால் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையினர் யோக மகேஸ்வரிக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் குவைத்தில் இருந்து நேற்று இரவு யோக மகேஸ்வரி விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார்.

Tags :
Advertisement