For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!

12:15 AM Jan 25, 2024 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Advertisement

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

” திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை 24-01-2023 புதன்கிழமை இரவு , அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement