Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ் 7 செய்தி எதிரொலி - மாஞ்சோலை சாலை சீரமைக்கும் பணி நிறைவு!

11:51 AM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அமர்ந்திருக்கும் மாஞ்சோலை சாலை சீரமைக்கும் பணி முடிவடைந்தது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை , நாலுமுக்கு,  காக்காச்சி ஊத்து உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மணிமுத்தாறு முதல் குதிரை வெட்டி கோதையாறு என்று மலை உச்சத்திற்குச் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்பட்டது.

கடந்த வாரம் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை,  10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலையை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்துவிட்டது.  இதனையடுத்து,   சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைக்கிராம மக்களின் சிரமங்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு, அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது.  அதன் எதிரொலியாகப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான முதற்கட்ட அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது.

இதையும் படியுங்கள் : வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!

கனமழையால்  உருக்குலைந்த சாலையில் உயிரைப் பணயம் வைத்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்களும் பயணம் மேற்கொண்டனர்.  மணிமுத்தாற்றில் இருந்து புறப்பட்ட பேருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம்  2:30 மணி நேரத்திற்கு மேலாக கடந்து சென்றடைந்தது.  இயல்பான சூழலில் 10 லிட்டர் டீசலில் சென்று வர முடியும் என்ற சூழலில் தற்போது ஒருமுறை சென்று வருவதற்கு 25 லிட்டர் டீசல் தேவைப்படுவதாகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மலைப் பாதையின்  சாலை சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், மலைச்சாலை பணிகள் 11 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.

Tags :
ManjolaiNews7TamilROADSouthFloodtirunelveliflood
Advertisement
Next Article