For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#INDvNZ டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாற்றம்!

06:33 PM Nov 02, 2024 IST | Web Editor
 indvnz டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாற்றம்
Advertisement

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை வேகமாக இழந்து தடுமாறுவதால் இந்திய அணி எளிதில் வெற்றியடையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisement

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (01.11.2024) தொடங்கிய இறுதி டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. மிக விரைவாகவே விக்கெட்கள் விழ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அந்த அனி வீரர், டேரில் மிட்சல் 82 ரன்கள் விளாசினார். இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்தது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை நியூசி. பந்துவீச்சை திணறடித்தனர். 5-வது விக்கெட்டாக 60 ரன்களில் ரிஷப் பந்த் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்களும் தட்டுத்தடுமாறி அவுட் ஆகினர். அதிகபட்சமாக, நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், நியூசி. அணியைவிட 28 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தன் இரண்டாவது இன்னிங்ஸை நியூசி. அணி துவங்கியது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் டாம் லாதம் டக் அவுட் ஆக அடுத்ததாக டெவன் கான்வே, வில் யங் இணை பொறுப்பாக ஆடினர். ஆனால், கான்வே விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் எடுத்ததும் அடுத்தடுத்து களத்திற்குள் வந்த நியூசி. வீரர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் விரைவாக விக்கெட்களைக் கொடுத்தனர். நிதானமான ஆட்டத்தை ஆடிய வில் யங் 8-வது விக்கெட்டாக 51 ரன்களில் அவுட் ஆக, இறுதியில் இரண்டாவது நாளில் 43.3 ஓவர்கள் முடிவில் நியூசி. 171 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இந்திய அணிக்கு 143 ரன்களை முன்னிலையாக (lead) வைத்திருக்கிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற மிக குறைந்த இலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement