For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#INDvsNZ | 2வது டெஸ்ட் போட்டியிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!

10:53 AM Oct 22, 2024 IST | Web Editor
 indvsnz   2வது டெஸ்ட் போட்டியிருந்து கேன் வில்லியம்சன் விலகல்
Advertisement

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வீரர் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.முன்னதாக முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

இந்த நிலையில் , காயம் முழுமையாக குணமடையாததால் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement