For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டம் - நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி!

10:34 AM Dec 31, 2023 IST | Web Editor
புத்தாண்டு கொண்டாட்டம்   நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி
Advertisement

புதுச்சேரியில், புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணிவரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளையும் மக்கள் வெகுசிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளை இனிப்புகள் வழங்குவது, கோயில்களுக்கு செல்வது, ஆடுதல், பாடுதல், பட்டாசு வெடிப்பது, வாழ்த்துகள் தெரிவிப்பது, மது அருந்துவது, இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்வது என பல்வேறு முறைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்வர்.

அந்த வகையில், ஆண்டுதோறும் புத்தாண்டை சிறப்பிக்க வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். புத்தாண்டை கொண்டாட உணவு ,  மது , இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்படும்.

இந்நிலையில், புதுச்சேரியில் வழக்கமாக 11 மணி வரை மதுபான கடைகளுக்கு அனுமதி உள்ள நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று மட்டும் நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் மதுபான கடைகள் இதற்கான சிறப்பு அனுமதி பெற்று மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும் என கலால்துறை அறிவித்துள்ளது. தற்போது வரை 90 நபர்கள் இந்த சிறப்பு அனுமதியை பெற்றுள்ளதாகவும் கலால்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement