For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டம் | “ANPR கேமரா மூலம் வழக்குப் பதியப்படும்” - காவல்துறை எச்சரிக்கை!

09:01 PM Dec 31, 2024 IST | Web Editor
புத்தாண்டு கொண்டாட்டம்   “anpr கேமரா மூலம் வழக்குப் பதியப்படும்”   காவல்துறை எச்சரிக்கை
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதி மீறல்களில் ஈடுபட்டால் ANPR கேமரா மூலமாக கண்டறிந்து, தாமாகவே வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

2024 ஆம் ஆண்டு இன்னும் ஒருசில மணி நேரங்களில் முடிவுக்கு வருகிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 2025 புத்தாண்டு பிறந்து மக்கள் அதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். உலகின் மற்ற பகுதி மக்களும் புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகிவருகின்றனர்.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதி மீறல்களில் ஈடுபட்டால் ANPR கேமரா மூலமாக கண்டறிந்து, தாமாகவே வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு,

  • குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்.
  • அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்
  • சாகச சவாரி செய்தல்,
  • இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல்,
  • தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல்,
  • ஒலி மாசு ஏற்படுத்துதல்

போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement