Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TheGoat திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட்!

03:53 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

விஜய்யின் ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ்’ திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. 

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், ட்ரெய்லரை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னதாக லியோ திரைப்படம் ஒரு நாளில் 3.1 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ்’ திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
news7 tamilNews7 Tamil Updatesthalapathy vijayThe GoatThe Greatest of All TimeTrailervenkat prabhuvijay
Advertisement
Next Article