தனுஷ் நடிக்கும் ' இட்லி கடை' படத்தின் புதிய அப்டேட் !
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள தனது நான்காவது திரைப்படமான 'இட்லி கடை', திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், இது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
'இட்லி கடை' திரைப்படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தனுஷின் முந்தைய இயக்கப் படங்களைப் போலவே, இதுவும் ஒரு மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் தனுஷ் - அருண் விஜய் இடையேயான மோதல் காட்சிகளும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான சரிகம வாங்கியுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்த்துள்ளனர்.