For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தக் லைஃப்’ படத்தின் புதிய அப்டேட்! இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

10:24 AM Jul 24, 2024 IST | Web Editor
‘தக் லைஃப்’ படத்தின் புதிய அப்டேட்  இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா
Advertisement

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அயர்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா,  நாசர்,  அபிராமி,  கௌதம் கார்த்திக்,  ஜோஜு ஜார்ஜ்,  ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்தது.

இதையும் படியுங்கள் :பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு – சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு!

60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு கூறுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்புக்கான டப்பிங்கை கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோர் முடித்து விட்டனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement