For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மே.9ல் அடங்காத அசுரன்! - ‘ராயன்’ திரைப்படத்தின் புது அப்டேட்!

09:04 PM May 07, 2024 IST | Web Editor
மே 9ல் அடங்காத அசுரன்    ‘ராயன்’ திரைப்படத்தின் புது அப்டேட்
Advertisement

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடலுக்கு ‘அடங்காத அசுரன்’  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பை நேற்று படக்குழு அறிவித்தது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே. 9-ம் தேதி வெளியாகும் என்றும், திரைப்படம் வரும் ஜுன் மாதம் வெளியாகும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் இப்பாடலுக்கு ‘அடங்காத அசுரன்’ எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement