'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட்!
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, சபீர் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படமானது ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. சார்பட்டா முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளில் வசூலைத் தவறவிட்டது. அதன் காரணமாக இந்த முறை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட பா. ரஞ்சித் முடிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.