Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BengaluruWomanMurderCase-ல் புதிய ட்விஸ்ட்... சந்தேகிக்கப்பட்ட குற்றவாளியும் தற்கொலை - போலீசாரின் அடுத்த நடவடிக்கை என்ன?

03:01 PM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரு பெண்கொலை வழக்கில், சந்தேகிக்கப்பட்ட குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மகாலட்சுமி (29) என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, அவரது வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததையும் அறிந்த போலீசார், அவரது கணவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் மகாலட்சுமிக்கும், வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்ததால் அவரை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளும் தன்னுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலை வழக்கில் சந்தேகப்படும் நபர் முக்தி ரஞ்சன் ராய் என்று போலீசார் கண்டறிந்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என அறிந்த போலீசார், அவரை பிடிக்க ஒடிசா விரைந்தனர்.

அதற்குள் அந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீசார் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். தான் கொலை செய்தது கண்டறியப்பட்டு சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பை, நோட்டு புத்தகம், ஸ்கூட்டி ஆகியவற்றை கைப்பற்றினர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் கிடைத்த கடித்தத்தில் பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமியை கொலை செய்தது நான் தான். பின்னர் அவரை உடலை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வந்தேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கொலைக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்தும் அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். மகாலட்சுமியின் அரக்க குணம் மற்றும் கடுமையாக சண்டையிடும் குணங்களால், தான் மிகுந்த சலிப்படைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில், மகாலட்சுமி என்னை தாக்கினார், என்னை கோபத்துடன் கத்தினார். இதனால் நான் அவரைத் தாக்கிக் கொன்றேன். அவரது உடல்களை பல துண்டுகளாக வெட்டினேன் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பத்ரக் காவல்துறையினர், அந்த தற்கொலை கடிதம் முக்தி எழுதியதுதானா என்று கையெழுத்தினை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Bengaluru PoliceBengaluru Woman Murder CaseCrimeodisha
Advertisement
Next Article