For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க #China அரசு அதிரடி திட்டம்!

10:42 AM Sep 14, 2024 IST | Web Editor
ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க  china அரசு அதிரடி திட்டம்
Advertisement

சீனாவில் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இதன் காரணமாக அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த சூழலில், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement