#NilavukuEnMelEnnadiKobam படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!
தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. மேலும் தனுஷ் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்படம் பிப்ரவரி 21-ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ பிப்ரவரி 6-ல் வெளியாவதால், இப்படம் சற்றே தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.