For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

07:07 AM Jul 28, 2024 IST | Web Editor
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்   புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
Advertisement

9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.  இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் துணைநிலை ஆளுநரை நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

  • ஜார்க்கண்ட்  ,  தெலங்கானாவில் ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாகவும் வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
  • ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டே நியமனம்
  • தெலங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமனம்
  • சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர் நியமனம்
  • ஜார்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ்குமார் கங்வார் நியமனம்
  • சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் டேக்கா நியமனம்
  • மேகாலயா மாநிலத்தின்  ஆளுநராக சி.ஹெச்.விஜயசங்கர் நியமனம் 
  • பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா நியமனம்
  • அஸ்ஸாம் ஆளுநராக லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா நியமனம். அவருக்கு மணிப்பூர் ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement