For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஞ்சிபுரத்தில் புதிய விபத்து நீதிமன்றம் திறப்பு!

விபத்து வழக்குகளுக்கென தனியாக நீதிமன்றம் இல்லாத குறையை நீக்க, புதிய விபத்து நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
03:29 PM Aug 14, 2025 IST | Web Editor
விபத்து வழக்குகளுக்கென தனியாக நீதிமன்றம் இல்லாத குறையை நீக்க, புதிய விபத்து நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் புதிய விபத்து நீதிமன்றம் திறப்பு
Advertisement

Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விபத்து வழக்குகளுக்கென தனியாக நீதிமன்றம் இல்லாத குறையை நீக்க, புதிய விபத்து நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விபத்து வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, புதிய விபத்து நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை (Motor Accidents Claims Tribunal) கையாளும்.

புதிய நீதிமன்றத்தைத் தொடங்குவதற்கான தொடக்க விழா, காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, நீதிபதி சௌந்தர், மற்றும் நீதிபதி கே. குமரேசு பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு தலைமை நீதிபதி செம்மல் அவர்கள், புதிய நீதிமன்றத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நீதிமன்றம், தாலுகா வளாகத்தில் செயல்படும். விபத்து வழக்குகளுக்கு என தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் விரைவாகக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Tags :
Advertisement