Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் Facebook வாயிலாக சிங்கில்ஸ்களுக்கு வலை! வசமாக சிக்கிய கணவன்கள்!

04:56 PM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பண்ணை வீட்டில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறி சிங்கில்ஸ்களுக்கு பேஸ்புக் வாயிலாக வலை விரித்த கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

சென்னை ஈ.சி.ஆர் சாலை , பனையூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டை கணவன் மனைவி எனக் கூறி இருவர் ஆன்லைன் வாயிலாக வாடகைக்கு எடுத்துள்ளனர்.  சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பார்ட்டி செய்ய போவதாகக் கூறி வீடு வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலையில்,  சனிக்கிழமை கணவன் மனைவி என கூறிக் கொண்டு 8 போலி தம்பதிகளும்,  அவர்களுடன் வயதான சிங்கில்ஸ் 10 பேரும் வந்துள்ளனர்.  பின்னர் பண்ணை வீட்டில் அதிக சப்தத்துடன் பாடல் இசைக்கப்பட்ட நிலையில்,  அரை நிர்வாண ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம்,  மது,  கஞ்சா,  ஜூக்கா என போதையில் மிதந்து ஆட்டம் போட்டுள்ளனர்.  சனிக்கிழமை இரவு பணம் கொடுத்து வந்த சிங்கில்ஸ் அனைவரும் சென்று விட,  ஞாயிற்றுக் கிழமை 7 பேர் புதிதாக வந்துள்ளனர்.

வார இறுதி நாளில் மது,  போதைபொருள், பெண்கள் என குத்தாட்டம் போட்டது குறித்த தகவல் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு சென்றிருக்கிறது.  படையோடு காவல் துறையினர் பனையூர் பண்ணை வீட்டிற்கு விரைந்தனர்.

காவல்துறை கதவை தட்டி திறந்தவுடன் குத்து பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. கதவை ஓங்கி தட்டியதும்,  ஆண் ஒருவர் வந்து கதவை திறந்திருக்கிறார்.  காக்கி உடையை பார்த்த உடன்,  அங்கிருந்த பெண்கள் அரை குறை ஆடையுடன் அறையில் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.

இந்நிலையில், கையும் களவுமாக 8 பெண்கள், 15 ஆண்கள் சிக்கிக் கொண்டனர்.  அப்படியே பண்ணை வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே வைத்து அவர்களிடம் விசாரணையை  போலீசார் மேற்கொண்டனர்.  விசாரணையின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.

கோயம்புத்தூர் மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45), ஜெயலட்சுமி (36), என்ற தம்பதி கடந்த 2018ம் ஆண்டு முதல் முகநூல் பக்கத்தில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி அதிலிருந்து real married swap party couples என்ற
பக்கத்தை உருவாக்கி அதில் சிங்கில்ஸ்க்கு வலைவீசியிருக்கின்றனர்.

அதோடு, பாலுணர்வை தூண்டும் வகையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்களோடு இருப்பதோடு,  பிறகு நடனம், மது விருந்து பார்ட்டி, நீச்சல்
குளத்தில் கொண்டாட்டம் என விளம்பரம் செய்து அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியது தெரிய வந்துள்ளது.

சிக்கும் நபர்களிடம் இருந்து பெண்களை வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.  ஒரு
நபருக்கு மது,  மாது விருந்திற்கு 13,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பணம்
வசூலித்துள்ளனர்.  பார்ட்டி என்ற பெயரில் கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக பாலியலில் ஈடுபட்டு பணம் பறித்து வந்துள்ளனர்.  அதில் கணவன் மனைவியாக வந்திருந்த சிலர் வறுமையின் காரணமாக,  குடும்ப சூழ்நிலையினால் இந்த தொழிலில் வந்து விட்டதாக கண்ணீர் விட்டுள்ளனர்.  வந்திருந்த தம்பதிகள் மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர்,  விருதுநகர்,  திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்.  மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த கணவன்கள் செய்வதறியாது திகைத்து போயினர்.  காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தெரியபடுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு
எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதே போல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர். 8 பெண்களின் கணவன் என கூறிய நபர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து
அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள்,  பாலுணர்வை தூண்டும்
மாத்திரைகள்,  மதுபாட்டில்கள், சிறிய அளவில் கஞ்சா,  ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்துனர்.

காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி என கூறி தப்ப, சனி, ஞாயிறுகளில் பிறந்த நபர்களை உடன் வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக கோவை தம்பதி விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள வந்துள்ளனர்.

இதனை அடுத்து,  8 பெண்களின் கணவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதோடு முகநூல் பக்கத்தை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags :
ChennaiCrimeECRFacebooknews7 tamilNews7 Tamil UpdatesprostitutionTamilNadu
Advertisement
Next Article