For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை - #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!

10:05 AM Aug 19, 2024 IST | Web Editor
நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை    modi க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்
Advertisement

ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"நேதாஜியின் அற்புதமான ஆளுமை, அறிவுக் கூர்மை, அசாதாரணமான உத்வேகம், சுயநலமின்மை, நாட்டின் சுதந்திரத்துக்காக செய்த தியாகத்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன்களின் மனதிலும் அவர் கதாநாயகனாக இருப்பதோடு மட்டுமின்றி எங்கெல்லாம் சுதந்திரத்தை விரும்பும் மக்கள் இருக்கிறார்களோ அவர்களின் மனதில் நாயகனாக போற்றப்படுகிறார். 1945, ஆகஸ்ட் மாதம் எதிரி படையிடம் ஜப்பான் சரணடைந்ததும் அங்கிருந்து ஜப்பான் ராணுவத்துக்குச் சொந்தமான விமானத்தில் தைவானுக்கு அவர் தப்பிச் செல்ல முயன்றார்.

அப்போது அவர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. எதிரிகளிடம் இருந்து தப்பித்து, தனது போராட்டத்தைத் தொடருவதற்காக அவர் சோவியத் யூனியனுக்குச் செல்ல திட்டமிருக்கலாம். ஆங்கிலேயர்களின் காவலில் இருந்த அவரது சகோதரர் சரத் சந்திர போஸ் உள்பட அவரது குடும்பத்தினர், நேதாஜி தாயகம் திரும்ப தொடர்ந்து போராடினர். ஆனால், 1945, ஆகஸ்ட் 15-க்குப் பிறகு எந்த நிலையிலும் அவர் உயிருடன் இருப்பதற்கான நம்ப தகுந்த தகவல்கள் கிடைக்கவில்லை. அவரது மரணம் குறித்து தகவல்களை விசாரிக்க, ஐஎன்ஏ படையின் மூத்த தலைவரான ஜெனரல் ஷா நவாஸ் கான் தலைமையில் 1956-இல் மூன்று பேர் கொண்ட கமிட்டியை முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அரசு அமைத்தது.

அக்கமிட்டி தனது அறிக்கையில் தைவானில் விமான விபத்து நிகழ்ந்தது தொடர்பான 11 பேரின் நேரடி சாட்சியங்கள், நேதாஜி இறப்புக்கு பிந்தைய நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது. இவை முதன்முறையாக அரசு ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நேதாஜி பயணம் செய்த விமானத்தில் அவருடன் பயணித்து உயிர் பிழைத்த ஐஎன்ஏ படை வீரர் ஹபீப் உர் ரஹ்மான் சாட்சியமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பின்னர் 1974-இவ் கோஸ்லா கமிஷன் அமைக்கப்பட்டது. 1956-இல் அமைக்கப்பட்ட ஷா நவாஷ் அறிக்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட இக்கமிஷனின் அறிக்கை அரசால் ஏற்றுகொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள் : ‘1 வருடமாக சம்பளம் இல்லை…வேலையும் போச்சு…’ – CEO-வின் #Passport மற்றும் #USVisaவை திருடிய ஊழியர்!

மூன்றாவது முறையாக மத்திய அரசால் 2005-இல் நீதிபதி முகர்ஜி கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தனது அறிக்கையில், விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. அவரது இறப்பு அடிப்படை ஆதாரமற்றது எனக் கூறியது. எனினும் அதை மத்திய அரசு நிராகரித்தது. எனவே, நேதாஜி பற்றி தகவல்களை இறுதி செய்ய வேண்டியது அவசியம். தங்களது திறமையான நிர்வாகத்தின் கீழ் இந்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சேர்த்து நடத்தப்பட்ட 10 விசாரணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேதாஜி 1945, ஆகஸ்ட் 18-இல் உயிரிழந்தார் என்பதற்கு இதுவே ஆதாரமாகும். எனினும், நேதாஜி தொடர்பான வதந்திகளை முடிவுக்குக் கொண்டுவர இறுதி அறிக்கையை இந்திய அரசு வெளியிட வேண்டும். ஜப்பானின் ரங்கோஜியில் உள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தங்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
Advertisement