For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேசிப்பாயா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

05:57 PM Jan 02, 2025 IST | Web Editor
நேசிப்பாயா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement

நேசிப்பாயா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது!

Advertisement

"குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'பில்லா' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என பெரியரிட்டுள்ளது.

இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

https://x.com/XBFilmCreators/status/1874689603216736630

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜன. 14-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement