For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!

09:37 PM Sep 29, 2024 IST | Web Editor
வெள்ளம்  நிலச்சரிவால் தத்தளிக்கும்  nepal   உயிரிந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு
Advertisement

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நேபாள் தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நேபாள உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் இதுவரை 68 பேரும், பாக்மதி மாகாணத்தில் 45 பேரும், கோஷி மாகாணத்தில் 17 பேரும், மாதேஸ் மாகாணத்தில் இருவர் என 131 பேர் இறந்துள்ளனர். இதேபோன்று, 64 பேரைக் காணவில்லை மற்றும் 61 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஏன்? வாழ்த்துகளை விளக்கமாக கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும் பாதுகாப்புப் படையினரின் தீவிர மீட்புப் பணிகளால் நாடு முழுவதும் 3,626 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களில் இருந்து இன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 193 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நேபாள ராணுவ வீரர்கள் முழுவீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement