நேபாளத்தில் இன்ஸ்டகிராம், யூடியூப் உட்பட 26 செயலிகளுக்கு தடை!
நேபாளம் அரசு கடந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மெட்டா, ஆல்ஃபாபெட்,எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் காலக்கெடு முடிவடைந்தும் தங்களது சமூக வலைதளங்களை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதில், பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களும் அடங்கும். டிக்டாக் நிறுவனம் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.