Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் நிலை என்ன?

09:41 AM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

Advertisement

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையில் 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டதில் திரிசுலி ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளையும் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
BuseslandslideNepalpassengersTrishuli River
Advertisement
Next Article