For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல தெலுங்கு நடிகரை இயக்கும் #Nelson?

12:10 PM Oct 07, 2024 IST | Web Editor
பிரபல தெலுங்கு நடிகரை இயக்கும்  nelson
Advertisement

நெல்சன் திலீப் குமார், ஜுனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன்.

ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமான கோலமாவு கோகிலா படம் வெளியாவதற்கு முன்பு நெல்சன் சிலம்பரசன் நடித்த மன்னன் படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாகாமல் போனது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரை வைத்து நெல்சன் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேவரா படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜுனியர் என்டிஆர் நடித்த தேவரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement