நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா 7ஆம் நாள் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவின் 7ம் நாளில் சாமி, அம்பாள் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர்
திருக்கோயில் ஆனித் திருவிழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பத்து
நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலை இருவேளைகளையும் சாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 7ம் திருநாளையொட்டி சாமி நெல்லையப்பர் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏழாம் திருநாளையொட்டி நடராஜ பெருமாள் தங்கத்தட்டி சப்பரத்தில் சிவப்பு சாது திருக்கோளத்தில் எழுந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
பின்னர் நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. சாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்வாடச உபச்சார மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு குடவறைவாயில் தீபாராதனை நடத்தப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.