Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் - தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

10:44 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தப்பியோடிய தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க காவல் உதவி ஆணையாளர் ராஜேஷ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று நெல்லை மாநகராட்சி.  இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது.  இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அசோக் குமாரும்,  அவருடன் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் கடந்த 5 ஆம் தேதி நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவை சந்திக்கச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் ; இந்திய சினிமா குறித்தும், அவதார் அடுத்த பாகம் குறித்தும் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்த சுவாரஸ்ய தகவல்...!

அப்போது அசோக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஆணையர், நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார்.  அதன்பேரில்,  மாநகராட்சி அலுவலகத்திற்கு காவல் ஆணையாளர் மூர்த்தி உத்தரவின்படி வருகை தந்த நெல்லை சந்திப்பு போலீசார்,  மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அன்னை இன்ஃப்ரா நிறுவன ஊழியர்கள் 3 பேரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அன்னை இன்ஃப்ரா நிறுவன மேலாண் இயக்குநர் அசோக் குமார் மற்றும் மேலாளர் சக்திவேல் மீது நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இதையடுத்து, லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரபல தனியார் நிறுவன மேலாளர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.  இந்த விவகாரத்தில் பிரபல தனியார் நிறுவன இயக்குநர் அசோக் குமாரை கைது செய்ய முயன்ற போது தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில்,  நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற  விவகாரத்தில் தப்பியோடிய பிரபல தனியார் நிறுவன இயக்குநரை கைது செய்ய காவல் உதவி ஆணையாளர் ராஜேஷ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையாளர் அலுவலக சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வுக்குட்படுத்தி தப்பியவரை தேடி வருகின்றனர்.

Tags :
AllegationArrestbribeCommissionerCorporationNellai
Advertisement
Next Article