#Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!
ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் யானை சிறுத்தை புலி கரடி
உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக மாஞ்சோலை ஊத்து நாலு மூக்கு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம் .இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஊத்து எஸ்டேட் பகுதியில் கொம்பு வைத்த யானை ஒன்று நகர முடியாமல் நின்று
கொண்டிருக்கிறது.
இது குறித்து இந்த பகுதிக்கு வந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்தியா கூறுகையில் யானை நலமுடன் உள்ளது. நோய்வாய்ப்படவில்லை. வயது முதிர்வின் காரணமாக மெதுவாக நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.
வயதான யானையுடன் யானை குடும்பம் யானையை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே
சுற்றி திரிகின்றன.வயது முதிர்ந்த யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்கு உணவு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.