For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் முறைகேடு விவகாரம் | அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

01:52 PM Jul 02, 2024 IST | Web Editor
நீட் முறைகேடு விவகாரம்   அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
Advertisement

நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வே விசாரிக்க முடிவு செய்துள்ளது.

Advertisement

நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.  வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண்,  67 பேருக்கு முழு மதிப்பெண்கள்,  நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள்,  ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது,  ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இந்த புகார் தொடர்பாக பீகாரில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனையடுத்து சிபிஜ விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்நிலையில்  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது, தேர்வுக்கு முன்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அவற்றிற்கான விடைகளை இருவரும் அளித்ததாக சிபிஐ தெரிவித்தது. இதனையடுத்து ஜார்கண்டைச் சேர்ந்த இருவரை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது.  ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக்,  துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஜமாலுதீன் என்ற பத்திரிகையாளரை சிபிஐ கடந்த 29ம் தேதி கைது செய்தது.  ஜமாலுதீன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோருக்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டார்.  மேலும், குஜராத்தில் உள்ள கோத்ரா, கோட்டா, ஆனந்த், அகமதாபாத் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது.  இதனிடையே, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வே விசாரிக்க முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான வழக்கின் முக்கிய விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

Tags :
Advertisement