For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் முறைகேடு விவகாரம் - ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது!

01:12 PM Jul 04, 2024 IST | Web Editor
நீட் முறைகேடு விவகாரம்   ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது
Advertisement

நீட்  தேர்வு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertisement

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்துள்ள அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது என நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதில் ஜார்க்கண்டை மையமாக கொண்டு செயல்படும் வினாத்தாள் கசிய விடும் கும்பல் ஒன்று குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக தன்பாத்தை சேர்ந்த அமன் சிங் என்பவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவரும் ஒரு குற்றவாளி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட அமன் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது” – ராமதாஸ்!

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement