For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசி கைதான நீலம் தேவி | வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

09:05 AM Dec 14, 2023 IST | Web Editor
நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசி கைதான நீலம் தேவி   வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Advertisement

நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசிய வழக்கில் கைதான நீலம் தேவி என்ற பெண் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள்,  புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே மடக்கிப் பிடித்த நிலையில்,  பின்னர் இருவரும் அவை பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர்.  அதே வேளையில்,  மக்களவையின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசிய மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணும்,  அன்மோல் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும்,  மற்றொருவர் சாகர் சர்மா என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மேலும்,  மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தை காண்பித்து இருவரும் மக்களவைக்குள் நுழைய அனுமதி சீட்டு பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசிய வழக்கில் கைதான நீலம் தேவி பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள காசோ குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலம் தேவி.  இவர் BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil மற்றும் NET தேர்ச்சி பெற்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அவரது இளைய சகோதரரான ராம் நிவாஸ்,  அவர் டெல்லி சென்றது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

அவர் படிப்புக்காக ஹிசாரில் இருக்கிறார் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.  நேற்று முன்தினம் தங்களை சந்திக்க வந்ததாகவும்,  நேற்று ஹிசார் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகவும் ராம் நிவாஸ் கூறினார்.  சமீப காலமாக வேலையில்லாத் திண்டாட்டத்தை குரித்து பலமுறை கேள்வி எழுப்பியதாகவும், விவசாயிகள் போராட்டங்களிலும் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

நீலத்தின் தாயார், மகளுக்கு வேலை கிடைக்காததால் கவலைப்படுவதாகக் கூறினார். நீலம் தேவி மிகவும் திறமையானவர்.  ஆனால் அவருக்கு வேலை கிடைக்க இல்லை. இதுகுறித்து தன்னிடம் நீலம் பேசும்போது, சாவதே நல்லது என்று அவர் கூறியதாகவும் நீலத்தின் தம்பி ராம் நிவாஸ் தெரிவித்தார்.

டெல்லி போலீஸ் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அத்துமீறல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஒருவரையொருவர் 4 ஆண்டுகளாக அறிந்திருந்தனர்.  சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டம் தீட்டி உளவு பார்த்தனர்.  போலீஸ் வட்டாரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பார்வையாளர்கள் கேலரி அனுமதியை 2 பேர் மட்டுமே பெற முடிந்தது.

Advertisement