ஜார்க்கண்டில் நீடிக்கும் இழுபறி... ஹாட்ரிக் வெற்றி பெறுமா ஜேஎம்எம்?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 41 இடங்கள் தேவை. வாக்குகள் காலைமுதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜேஎம்எம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என கேள்வி எழுந்த நிலையில், என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு, ஹேமந்த் சோரனின் கைது ஆகியவை தற்போது ஜேஎம்எம்-க்கு சவாலாக மாறியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி என்டிஏ 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 41 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.