For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நயன்தாரா பிறந்தநாளுக்கு ரூ. 3.4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்!

12:44 PM Nov 30, 2023 IST | Web Editor
நயன்தாரா பிறந்தநாளுக்கு ரூ  3 4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
Advertisement

நடிகை நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். 

Advertisement

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை வளர்த்து வருகின்றார்கள்.

சமூக வலைதளங்களில் குழந்தைகள் குறித்து பதிவிடும்போதெல்லாம் அவர்களை உயிர் மற்றும் உலகம் என்றே விக்னேஷ் சிவன் குறிப்பிடுவார்கள். இதையடுத்து அவர்களின் முகத்தையும் கடந்த மாதங்களில் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளிற்கு விக்கி கோடி கணக்கு மதிப்புள்ள ஒரு பரிசை வழங்கியுள்ளார். நவம்பர் 18 ஆம் திகதி தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது கணவர் விக்னேஷ் சிவனிடமிருந்து பிறந்தநாள் பரிசைப் பெற்றுள்ளார்.

தனது மனைவிக்கு Mercedes-Benz Maybach ஐ வழங்கியுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பதிவில் காரின் சரியான மாடல் வெளியிடப்படவில்லை என்றாலும், தற்போது இந்தியாவில் இரண்டு Mercedes-Benz Maybach மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement