For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Haryana முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்!

02:08 PM Oct 17, 2024 IST | Web Editor
 haryana முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்
Advertisement

நயாப் சிங் சைனி இன்று ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார்.

Advertisement

90 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இதன் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 37 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தது பாஜக.

இந்நிலையில் இன்று ஹரியானாவின் முதலமைச்சராக, பாஜகவின் நயாப் சிங் சைனி  பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா நவாப் சைனிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நவாப் சிங் சைனியோடு 14 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அனில் விஜ், கிருஷன் லால் பன்வர், ராவ் நர்பீர், மஹிபால் தந்தா, விபுல் கோயல், அரவிந்த் சர்மா, ஷியாம் சிங் ராணா, ரன்வீர் கங்வா கிருஷ்ணா பேடி, ஸ்ருதி, சவுத்ரி, ஆர்த்தி சிங் ராவ், ராஜேஷ் நகர், கௌரவ் கவுதம் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Tags :
Advertisement